அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட வாயிலில் மர்ம நபர் தாக்கியதில் காவல் அதிகாரி உயிரிழப்பு.. மற்றொருவர் படுகாயம்

0 1532

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் பகுதி காவல் நிலைய அதிகாரிகள் மீது இளைஞன் ஒருவன் காரால் மோதியதில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார்.

காரில் வந்த கொலையாளி போலீஸ் தடுப்பை இடித்துக் கொண்டு வந்து போலீசார் மீது மோதினான். அதன் பின்னர் காரில் இருந்து கத்தியுடன் இறங்கிய அவனை  போலீசார் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நோவா கிரீன் என்ற கறுப்பின  இளைஞன் விர்ஜீனியாவை சேர்ந்த போதை அடிமை என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதற்கு அதிபர் ஜோ பைடன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையை தொடர்ந்து கேபிடல் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போது 3 மாதங்களில் 2 ஆவது முறையாக அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments