ஹெல்மெட்டு – மாஸ்க்கில் இருந்து கட்சிகாரர்களுக்கு விதி விலக்கா மக்களே..? ஒரு போலீஸ காணோம்..!

0 3130
ஹெல்மெட்டு – மாஸ்க்கில் இருந்து கட்சிகாரர்களுக்கு விதி விலக்கா மக்களே..? ஒரு போலீஸ காணோம்..!

ஹெல்மெட் போடாத சாமானிய வாகன ஓட்டிகளை விரட்டிப்பிடித்து அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து காவலர்கள், ஹெல்மெட் போடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினரை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையோர நிழலிலே.. சாகவாச தொழிலிலே.. என்று ஹெல்மெட் போடாத இருசக்கரவாகன ஓட்டிகளை ஓரங்கட்டி அபராதம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வசூலிப்பதில் நம்ம ஊர் காவல்துறையினர் எப்போதும் கில்லாடிகள்..!

கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலில் இருக்கும் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை பிடிப்பதை தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறார்களா ? என்று எண்ணும் அளவுக்கு இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார கூத்துக்கள் அரங்கேறி வருகின்றது.

ஹெல்மெட் அணியாமல் தேசிய நெடுங்சாலையில் கும்பலாக பர்கூர் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சி கொடியுடன் பலர் ஊர்வலம் வந்த போதும் எந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியையும் போலீசார் மறிக்கவும் இல்லை..! அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இல்லை..!

வேப்பணஹள்ளி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அந்த கட்சியினர் இரு சக்கரவாகன பேரணியாக சென்றனர் அவர்களில் ஒருவரை கூட மறித்து ஹெல்மெட் அணியாதது ஏன் ? என்று எந்த ஒரு காவல் அதிகாரியும் கேட்கவில்லை..!

கோவில்பட்டியில் வேட்பாளர் தலைமையில் இரு சக்கரவாகனப்பேரணியில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டு தோழர்களிடம் மட்டும் போலீசார் ஹெல்மேட் ஏன் போடவில்லை என்று கேட்டு விடவா போகிறார்கள்..!

கட்டாய ஹெல்மெட் சட்டம் வாகன ஓட்டிகளின் உயிரை காக்க கொண்டு வரப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் வாகன சோதனை என்ற பெயரில் சாமானிய மக்களை நிறுத்தி வைத்து, அபராதம் வசூலிப்பதில் காட்டிய வேகத்தை அரசியல்கட்சியினரிடம் காவல்துறையினர் காட்ட தயங்குவது ஏன் ?

தேர்தலுக்கு இன்னும் இடையில் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து ஊர்களிலும் வேகம் எடுக்கும் இருசக்கர வாகன பேரணிகளுக்கு அனுமதி வழங்க ஹெல்மெட் கட்டாயம் என்று கூறுவார்களா ?

அல்லது 200 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஒவ்வொரு கார்களையும் நிறுத்தி சோதனை நடத்துவது போல போலீசாரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், தேர்தல் அதிகாரிகள், ஹெல்மெட் கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வார்களா என்பதே சாமானியர்களின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments