மகாராஷ்ட்ராவில் இன்று முதல் கடுமையான ஊரடங்கு என தகவல்

0 6759
மகாராஷ்ட்ராவில் இன்று முதல் கடுமையான ஊரடங்கு ?

மகாராஷ்ட்ராவில் இன்று முதல் புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மருத்துவ சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், பரிசோதனை வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்த அவர், வரும் காலத்தில் அடிப்படை வசதிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

தினசரி நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகளவில் இருந்தால் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தினசரி 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்வதாகவும் தாக்கரே தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments