தமிழகம் - புதுச்சேரியில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாம்

0 1280

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு 6ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் உள்ளூர் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான அணிகள் அதிகபட்ச வெற்றியை ஈட்டும் முனைப்போடு களப் பணியாற்றி வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க.- தே.மு.திக., நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

நாளை மாலை 7 மணிக்குப் பிறகு, திரையரங்கு, தொலைக்காட்சி, வேறு எந்த மின்னணு ஊடகம் மூலம் பிரசாரங்கள் கூடாது என்றும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments