சாயந்திரம் 3 டியூப் லைட்... நைட்டு விடி பல்பு தான்; பெண்களுக்கு பூ போட்ட வேட்பாளர்..!

0 3407
சாயந்திரம் 3 டியூப் லைட்... நைட்டு விடி பல்பு தான்; பெண்களுக்கு பூ போட்ட வேட்பாளர்..!

ழும்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு கூட்டத்தை சேர்பதற்கு, உடம்பில் டியூப் லைட்டை உடைத்து வித்தைக் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. பிரச்சாரத்தில் தன் மீது பூக்களை தூவிய பெண்களிடம் இருந்து பூத்தட்டுக்களை பறித்த வேட்பாளர் ஜான் பாண்டியன் அந்த பெண்கள் மீது பூக்களை கொட்டி விளையாடினார்.

எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஜான்பாண்டியனின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக வெறும் உடலில் டியூப் லைட்டை அடித்துக் கொள்ளும் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது

3 டியூப் லைட்டுகளை உடலில் ஒன்றன் பின் ஒன்றாக அடித்து உடைத்த இளைஞர் ஒருவர், அதன் உடைந்த பாகங்களை தலையில் அடித்த போது கூடியிருந்தவர்கள் மீது பட்டது.

பிறர் காலில் குத்தி விடும் என்பதால், வீதியில் கிடந்த உடைந்த டியூப் லைட் பாகங்களை சில பெண்கள் அக்கறையுடன் பெருக்கி ஒதுக்கினர்

அதனை தொடந்து அங்கு பிரச்சாரத்திற்கு வந்த வேட்பாளர் ஜாண்பாண்டியனை வரவேற்கும் விதமாக சில பெண்கள் மலர் தூவினர்

தன் மீது மலர்கள் விழுந்த உற்சாகத்தில் திளைத்த ஜான்பாண்டியன், பூப்போட்ட பெண்களின் கையில் இருந்த தட்டுக்களை பறித்து, விளையாட்டு தனமாக அந்த பெண்கள் மீதே மொத்த பூக்களை கொட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments