காட்பாடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக வேட்பாளரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேர் கைது

காட்பாடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக வேட்பாளரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெட்டுகுலம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகாரில் 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் , அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் ராமுவின் சகோதரர் ஷோபன்பாபு உள்ளிட்ட 8 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய பணத்திற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என அதிமுக வேட்பாளர் ராமு விளக்கமளித்துள்ளார்.
Comments