அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

0 1521
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவராக கூறப்படும் சீனிவாசன், அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆவார்.

அவரது வீட்டிற்கு, மதுரை மண்டலத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments