"பாஜக - அதிமுக கூட்டணியின் கவனம் முழுவதும் நாட்டின் வளர்ச்சி மீதே உள்ளது"- பிரதமர் மோடி

0 2389
"பாஜக - அதிமுக கூட்டணியின் கவனம் முழுவதும் நாட்டின் வளர்ச்சி மீதே உள்ளது"- பிரதமர் மோடி

கன்னியாகுமரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்

பாஜக - அதிமுக கூட்டணியின் கவனம் முழுவதும் நாட்டின் வளர்ச்சி மீதே உள்ளது

தமிழகத்தில் சாலை பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

வாரிசு அரசியலுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கின்றனர்

356வது சட்டப் பிரிவை பயன்படுத்தி காங்கிரஸ் அரசு, பல மாநில அரசுகளை கலைத்துள்ளது

உயர்மட்ட அதிகார மமதை கொண்டிருப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம்

அனைவரும் இணைந்து, நம்பிக்கை பெற்று உயர்வோம் என்பதே எங்களது தாரக மந்திரம்

நாட்டு மக்கள் அனைவருக்குமானது பாஜக அரசு. அதன்படியே செயல்பட்டு வருகிறது

மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் தங்களது மோதலை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்

சேவை செய்யும் போது நாங்கள் சாதி, மத பாகுபாடு பார்ப்பது இல்லை

கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் சிக்கியவர்களை வந்தே பாரத் மிசன் மூலம் இந்தியா அழைத்து வந்தோம்

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த 5 லட்சத்திற்கும் அதிகமானோரை மீட்டு வந்தோம்

விவசாயிகளுக்காக அதிக கடன், சிறந்த சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம்

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க தீவிரமாக வேலை செய்து வருகிறோம்

சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது

உள்ளூர் கலைப் படைப்புகள் தனித்துவமான தயாரிப்புகள். அதனை பிரபலமடைய செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது

கடலோர மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்

புதிய துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்

மீனவர்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

மீனவர்களுக்கான வளர்ச்சி பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது

இலங்கை சிறையில் தற்போது எந்த தமிழக மீனவர்களும் இல்லை

மீன்களை விற்பனை செய்வதற்கு இருக்கும் தடைகள் அகற்றப்படும்.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments