அசாமில் பா.ஜ.க. வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்ட சென்ற சம்பவம்.. மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்

0 1448
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்ட சம்பத்தை அடுத்து மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்ட சம்பத்தை அடுத்து மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர்,பதர்கண்டி சோதனை சாவடியில் பா.ஜ.க வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்படுவதை கண்ட சிலர், அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து தேர்தல் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில், வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்தது செல்லப்பட்ட கார் பழுதானதால் வழியில் சென்ற வேறொரு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றியதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.

அந்த கார் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்பதை அடுத்து  4 அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments