தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 8296
தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

வருகிற 6 ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகிற 4 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பரப்பு,ஆந்திர கடலோரம் ஆகிய இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments