வருமான வரி சோதனைக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது துணிந்து எதிர்கொள்ளும் -மு.க.ஸ்டாலின்

0 1783
வருமான வரி சோதனை நடத்தி வீட்டில் முடக்கி விடலாம் என்று எதிரணியினர் நினைப்பதாகவும், இந்த சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்றும் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை நடத்தி வீட்டில் முடக்கி விடலாம் என்று எதிரணியினர் நினைப்பதாகவும், இந்த சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்றும் அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஜெயங்கொண்டம், வடலூர், சீர்காழியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். இந்த கூட்டங்களில் பேசிய அவர், சென்னையில் தம்முடைய மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவதை சுட்டிக்காட்டினார்.திமுக இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது என்ற அவர், மிசா, நெருக்கடிகால நிலை எல்லாவற்றையும் எதிர்கொண்டு மீண்டு வந்த இயக்கம் திமுக என்றார்.

கல்வி, வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தாலே ஒரு குடும்பம் முன்னேறி விடும் என்பதால், அந்த பணியை திமுக போராடி நிறைவேற்றி கொடுத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். இட ஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்தினருக்கும், கலைஞர் உறுதுணையாக இருந்தது போல, தாமும், இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மகளிர் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இந்த பிரசாரத்தின் போது ஜெயங்கொண்டம் வேட்பாளர், அரியலூர் வேட்பாளர், பெரம்பலூர் வேட்பாளர், குன்னம் வேட்பாளர் ஆகியோருக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

குறிஞ்சிப்பாடி வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கடலூர் வேட்பாளர், புவனகிரி வேட்பாளர், சிதம்பரம் வேட்பாளர், காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார். இதே போல சீர்காழி வேட்பாளர், மயிலாடுதுறை, வேட்பாளர், பூம்புகார் வேட்பாளர் ஆகியோருக்காக ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments