ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப்படை..

0 810
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

காக்கபூரா (Kakapora) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து, இராணுவம், மத்திய படை போலீசார் உள்ளிட்டோர் அடங்கிய, பாதுகாப்புப் படைக் குழுவினர், அதிரடியாக சுற்றிவளைத்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், பாதுகாப்புப்படையினரும், தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

இதில், தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மூவரில், 2 தீவிரவாதிகள், காஷ்மீர் பாஜக தலைவர் ஒருவரது வீட்டில் நேற்று தாக்குதல் நடத்தியவர்கள் என தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments