அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து : தனிநபர் கவனமின்மையால் ஒன்றாக கலந்த வெவ்வேறு தடுப்பூசி மருந்துகள்

0 1822
அமெரிக்காவில் வீணாகி போன ஒன்றரை கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து : தனிநபர் கவனமின்மையால் ஒன்றாக கலந்த வெவ்வேறு தடுப்பூசி மருந்துகள்

மெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த தனிமனித தவறால் ஒன்றரை கோடி டோசுகள் கொரோனா தடுப்பூசி வீணானது.

அங்குள்ள பால்ட்டிமோர் தொழிற்சாலையில் ஜான்சன்&ஜான்சனின்  தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு டோஸ் மட்டும் போட வேண்டிய தடுப்பூசியாகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியும் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.

எமர்ஜென்ட்  பயோசொல்யூஷன்ஸ் என்ற மருந்து நிறுவனம் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிறுவனப் பணியாளர்கள் சிலரின் தவறால் இந்த இரண்டு தடுப்பூசிகளின் வேதிப்பொருட்களும் ஒன்றாக கலந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஒன்றரை கோடி டோசுகள் தடுப்பூசி யாருக்கும் பயனின்றி வீணாகி விட்டதாக நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments