மதுரையில் எய்ம்ஸ் நிச்சயம்.! பிரதமர் திட்டவட்டம்.!

0 1571

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொய் பரப்புரை மேற்கொள்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மதுரை பாண்டிக்கோவில் சுற்றுச்சாலை அருகே, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. வெற்றி வேல்.. வீர வேல்.. எனக் கூறி பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி,
மதுரை மக்களே நல்லா இருக்கீங்களா? என்று தமிழில் நலம் விசாரித்தார்.

தூங்கா நகரமான மதுரை மாநகருக்கு வந்திருப்பதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தமிழில் கூறிய பிரதமர், மீனாட்சி அம்மன் குடிகொண்டிருக்கும் மதுரைக்கு வந்திருப்பது, தமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பாக்கியம் என்றும் கூறினார்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரம், தமிழ் கலாச்சாரத்தின், பண்பாட்டின் மையமாக திகழ்வதாக, பிரதமர் புகழாரம் சூட்டினார். செளராஷ்ட்ரா மக்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தபோது, அவர்களை மதுரை மக்கள் ஏற்றுக்கொண்டது ஒருங்கிணைந்த இந்தியாவிற்கு மிகச்சிறந்த உதாரணம் என மோடி குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு 100 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்ய உள்ளதாக கூறிய பிரதமர், மதுரை - கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகு தொழில்துறை மேம்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், உயிர் நீர் திட்டத்தின் மூலம், மதுரையில் 24 மணி நேரமும்குடிநீர் வழங்கும் நிலை ஏற்படும் என வாக்குறுதி அளித்தார். இதுமட்டுமின்ற, உயிர் நீர் திட்டத்தின் மூலம், மதுரை வைகை ஆற்றில், அனைத்து நாட்களும் தண்ணீரை ஓடச் செய்ய இயலும் என மோடி கூறினார்.

மதுரையில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ள பிரதமர், இதுகுறித்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் பொய் பரப்புரை மேற்கொள்வதாக கூறியுள்ளார். மீனாட்சி, கண்ணகி, ராணி மங்கம்மாள் ஆகியோரை போற்றி, பெருமைபடுத்திய ஊர் மதுரை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments