வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி: நடிகர் ரஜினிகாந்த்

0 3155

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரையுலகினர், நண்பர்கள், உலகெங்குமுள்ள தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments