காட்பாடியிலுள்ள உணவகத்தில் நள்ளிரவில் நடந்த சோதனை... ரூ. 18 லட்சம், அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல்

0 2532

வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள உணவகம் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டு 18 லட்ச ரூபாய் பணம், அதிமுக  சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த வருமானவரித்துறை அதிகாரிகள், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல்புதூர் பகுதியிலுள்ள நாயுடு ரெஸ்டாரண்ட் என்ற உணவகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நள்ளிரவு ஒரு மணியளவில் அங்கு சென்ற அதிகாரிகள், 18 லட்ச ரூபாய் ரொக்கம், வாக்காளர் விவரம் அடங்கிய பூத் சிலிப்புகள், அதிமுக  சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments