மத்திய அரசின் பொதுத்துறை தேர்வு வாரியத்தின் தலைவராக தனியார் துறையைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் நியமனம்

0 1758
மத்திய அரசின் பொதுத்துறை தேர்வு வாரியத்தின் தலைவராக தனியார் துறையைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் நியமனம்

த்திய அரசின் பொதுத்துறை தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக தனியார் துறையைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவியான இவர், தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

இவரது பணி நியமனத்துக்கு மத்திய பணியாளர் நியமன தேர்வுக்குழு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் பொதுத்துறையில் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments