ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்

0 1997
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி டூவி புரத்தில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து அதில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இரவு 8.45 மணியளவில் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி வரை சோதனை நீடித்த நிலையில், வெளியே காத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், கோபமடைந்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சோதனையில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில், அதனை அதிகாரிகள் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments