மேற்குவங்கத்தில் இன்னொரு தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா ? பிரதமர் மோடி கேள்வி

பல்வேறு அரசியல் பரபரப்புகளுடன் மேற்குவங்கத்தில் நேற்று இரண்டாவது கட்டம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி நந்திகிராமில் தமது இல்லத்தில் ஓய்வெடுத்த நேரத்தில் பிரதமர் மோடி வங்காளத்தின் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கு ஜேநகர் மற்றும் உலுபேரியாவில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஒருபக்கம் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் மறுபுறம் மோடி பிரச்சாரம் செய்தது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்று மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
நந்திகிராமில் தோல்வி உறுதியாகிவிட்டதால் இன்னொரு தொகுதியிலும் மமதா போட்டியிடுவாரா என்று மோடி கேள்வி எழுப்பியதும் மமதா பானர்ஜிக்கு கடும் கொந்தளிப்பைக் கொடுத்துள்ளது.
மமதா இன்னொரு தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நந்திகிராமில் 90 சதவீத வாக்காளர்கள் தமக்கே வாக்களித்திருப்பது உறுதி என்று மமதா பானர்ஜி தெரிவித்தார்.
Comments