புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

0 994
புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இன்று அதிகாலை முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. காகாபோரோ எனுமிடத்தில் ராணுவம் போலீசார் கொண்ட கூட்டுப் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளைத் தேடி வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அப்பகுதியில் சண்டை நீடித்து வருகிறது.

இதனால் புல்வாமா முழுவதும் செல்போன் சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments