"பெண்கள் பற்றி அவதூறு பரப்பும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் புகட்டுங்கள்": அமைச்சர் அமித்ஷா

0 1181

பெண்களைப் பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

திருக்கோவிலூரில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய அவர், எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி ஆ.ராசா பேசியதை விமர்சித்தார்.

முந்தைய காலங்களில் கூட திமுகவினர் ஜெயலலிதாவைப் பற்றி இதுபோன்ற பல அவதூறு கருத்துகளைச் கூறியிருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். பின்னர், கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் அமித்ஷா உணவருந்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments