மகாராஷ்டிராவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 43,183 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 1525

மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 43 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 249 பேர் உயிரிழந்துவிட்டனர்.  பாதிக்கப்பட்ட ஒருவர் முகக்கவசம் அணியாமல் நடமாடினாலும் , சானிட்டைசர், இடைவெளி போன்றவற்றை அலட்சியம் செய்தாலும் அவர் மூலம் 400 பேருக்கு இந்தத் தொற்றுப் பரவக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே கொரோனா  பரவல் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூடுவது குறித்து சிவசேனா தலைமையிலான மகாராஷ்ட்ரா அரசு பரிசீலித்து வருகிறது. ஷீரடி சாய்பாபா கோவில்,மும்பை சித்தி விநாயகர் ஆலயம், ஹாஜி அலி தர்கா போன்ற இடங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments