இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்ற வேண்டும் - மிசோரம் முதலமைச்சர்

0 733
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்ற வேண்டும் - மிசோரம் முதலமைச்சர்

இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும் என்றும், மியான்மர் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், ராணுவ ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து வரும் அகதிகள், மிசோரமுக்கு வந்ததும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவுக்கு வந்த அகதிகளை திரும்ப அனுப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்ட சோரம்தங்கா, இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மியான்மரில் இருந்து அகதிகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மிசோரம் உள்ளிட்ட 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments