தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதற்காக ஆ.ராசா பிரச்சாரம் செய்ய 2 நாட்களுக்குத் தடை விதித்தது தேர்தல் ஆணையம்

0 1596

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதாக கூறி அவரது தாயாரை இழிவுபடுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக  அவர் அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதற்காக ஆ.ராசாவை கண்டித்துள்ள ஆணையம், இனி பிரச்சாரத்தின் போது அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ பேசக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments