நாமக்கல் மாவட்டத்தில் சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் உறுதி

0 1110

நாமக்கல் மாவட்டத்தில் சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரித்து காவிரி ஆற்றில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள, குமாரபாளையம் மற்றும் வெப்படை ஆகிய பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டார். 

 குமாரபாளையத்தில் சாயப்பட்டறைகள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரைச் சுத்திகரிக்க நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதும், கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேறும் நீர், காவிரி ஆற்றில் கலக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 உயர்கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், தேசிய அளவில் 100க்கு 49 விழுக்காடு என்ற விகிதத்தில் மாணவர்கள் படிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். 7 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பில் 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 உள்ளாட்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி அதிமுக அரசு சாதனை படைத்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட அதிமுக ஆட்சியில் ஊழல் இருக்காது என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments