அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட ம.நீ.ம பெண் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாண பத்திரம்..!

0 31443
அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட ம.நீ.ம பெண் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாண பத்திரம்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து விவரங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரங்கள், அதிகமுறை பதிவிறக்கம் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மதுரவாயல் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாண பத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை, பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

15,563 முறை கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தையும், 10,261 முறை சீமானின் சொத்து விவரங்களும் தரவிறக்கம் ஆகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரம் 6879 முறையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்து விவரங்கள் 4351 முறையும், வானதி சீனிவாசனின் 4210 முறையும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments