கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

0 3258
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கரூர் ஆட்சியர் மலர்விழி, காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர், தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக, கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம் வடநேரேவும், கரூர் எஸ்.பி.யாக சஷாங் சாயும் நியமிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் காவல்துறை தலைமையிடத்து துணை ஆணையராக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments