தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை..!

தமிழகத்தில் 2 ஆம் தேதி நடைபெறும் இரு கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.
மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் 2 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பா.ஜ.க.கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்பட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
பின்னர் மாலையில் நாகர்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
Comments