பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1177

அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாதபடி காவல்துறை செயல்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிரச்சார கூட்டகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

பிரச்சார கூட்டங்களால் சாதாரண மக்களும் அசௌகர்யம் அடையக் கூடாது என்ற நீதிபதிகள், மக்களுக்கு பெருத்த அளவிலான சிரமங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments