கோவையில் அரசியல் கட்சியின் இருசக்கர வாகனப் பேரணியின்போது, தகராறு ஏற்பட்டு கல் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில், அரசியல் கட்சியின் இருசக்கர வாகனப் பேரணியின்போது, தகராறு ஏற்பட்டு கல் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் பாலச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின்பேரில், அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, கொலை மிரட்டல், தகாத வர்த்தை பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ், உக்கடம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து உத்திரப்பிரதேச முதல்வரை வரவேற்க அனுமதியின்றி பேரணியாகச் சென்ற, பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், இந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர், தசரதன், குணா ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Comments