தனக்கு திருமணம் செய்து வைக்காமல் தம்பிக்கு ஏற்பாடு... ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்!

0 8114

செங்கல்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காததால் தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 68) இவருக்கு  மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று விட்டது. இவருக்கு இரண்டாவதாக சீனிவாசன் என்ற மகன் இருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தினால் சீனிவாசனுக்கு பெண் பார்க்காமல் தன் மூன்றாவது மகனுக்கு பெண் தேடி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெண் வீட்டிலும் சந்திரசேகர் பேசி வந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்காமல், தன் தம்பிக்கு பெண் தேடி வருவதை அறிந்து சீனிவாசன் கோபத்தில் இருந்துள்ளார்.

இதனால் , தன் சொத்தை பிரித்து தருமாறு தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சந்திரசேகரோ, சொத்தை பிரித்து தர மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சீனிவாசன், சந்திரசேகரை அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சந்திரசேகர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார் .தந்தை சந்திரசேகரை வெட்டி கொலை செய்த மகன் சீனிவாசன் மீது மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

திருமணம் செய்து வைக்காத காரணத்தினால், தந்தையை வெட்டி கொலை செய்தாரா அல்லது சொத்து பிரச்னையால் கொலை செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments