அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 5814
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதாக கூறி அவரது தாயாரை இழிவுபடுத்தும் விதமாக பேசிய விவகாரத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியதற்காக ஆ.ராசாவை கண்டித்துள்ள ஆணையம், இனி பிரச்சாரத்தின் போது அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ பேசக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் பேச்சு கண்ணியக்குறைவாக மட்டும் அல்ல தாய்மையை இழிவு செய்யும் வகையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஆ.ராசா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments