சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

0 879
சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.

தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இடம் பெற்றுள்ளன.

சென்னையில் ஏற்கனவே 901 இடங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் புதிதாக மேலும், 2 ஆயிரத்து 369 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments