புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

0 1677

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

லாஸ்பேட்டை, காலாப்பட்டு, காமராஜ் நகர், மண்ணாடிப்பட்டு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுடன் பேரணியாக சென்ற அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். லாஸ்பேட்டையில் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையில் பேரணி நிறைவடைந்தது.

முன்னதாக, கருவடிகுப்பம் சித்தானந்தா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா, லாஸ்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments