சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க செல்வோருக்காக சிறப்பு பேருந்துகள் சேவை இன்று முதல் தொடக்கம்.

0 1329
தேர்தலில் வாக்களிக்க செல்வோருக்காக சிறப்பு பேருந்துகள் சேவை இன்று முதல் தொடக்கம்.

சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான சிறப்பு பேருந்து சேவை இன்று தொடங்குகிறது.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை பிற ஊர்களுக்கு 14ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2ஆயிரத்து 644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

https://www.tnstc.in/home.html  என்ற இணைய தளத்திலும், tnstc செயலிலும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments