நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

0 1531
நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதன் முதலில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

முதலில் சுகாதார ஊழியர்களுக்கும், அடுத்து முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 7 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments