பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது மேலும் 3 ரபேல் விமானங்கள்

0 1338
பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது மேலும் 3 ரபேல் விமானங்கள்

பிரான்சில் இருந்து மூன்று ரபேல் விமானங்கள் நேற்றிரவு இந்திய மண்ணை வந்தடைந்தன.

பிரான்சின் இஸ்ட்ரெஸ் விமானப் படைத்தளத்தில் இருந்து எங்கும் இடைநிறுத்தல் இல்லாமல் வந்த இந்த விமானத்தில் ஐக்கிய அரபு அமீரக விமானப்படை அதிகாரிகள் எரிபொருளை நிரப்பியதாக பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று விமானங்கள் மேற்குவங்கத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஏற்கனவே மூன்று தவணைகளாக இதுவரை 11 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நான்காவது தவணையாக மூன்று ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில் மேலும் விமானங்கள் ஓரிரு மாதங்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments