மோடி நிறைய பேய்களுக்கு உதவினார்..! நமீதா நாக்கில் நழுவும் தமிழ்

0 7289
மோடி நிறைய பேய்களுக்கு உதவினார்..! நமீதா நாக்கில் நழுவும் தமிழ்

முத்ரா திட்டத்தின் மூலம் மோடிஜி நிறைய பேய்ங்களுக்கு உதவி செய்ததாக கூறி நமீதா திகைக்க வைத்தார். நமீதாவின் நாக்கில் நழுவும்  நற்றமிழ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சிவகங்கையில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார். சும்மா ஆடிக்கொண்டும் , பாடிக் கொண்டும் சென்று விடகூடாது என்பதை உணர்ந்து, கருத்தாக என்ன பேச வேண்டும் என்பதை தங்லீஸ் மொழியில் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்தனர். அதன் படி நலம் விசாரித்த நமீதாவுக்கு ஒருவர் கூட பதில் சொல்லவில்லை

தன்னம்பிக்கையுடன் உரையை படிக்க தொடங்கிய நமீதா, மோடிஜி முத்ரா திட்டம் உங்களுக்காக கொண்டி வந்து மூலம் நிறைய பேய்ங்களுக்கு உதவி செய்தார் என்று கூறி அதிர வைத்தார்

தாமரைக்கு ஓட் போட்ரதுனாலே, மாசத்துக்கும் குடும்பத்துக்கும் தலைவிக்கு 1500 ரூபாய் கொடுக்க போறேன், அது கூட இலவசமா..! மற்றும் வருசத்துக்கு ஆரு கேஸ் சிலிண்டர்ஸ் கொடுக்கபோறேன் .. அது கூட இலவசமாய் என்றார்

இடமில்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீட்டும் கட்டிக் கொடுக்கிறோம் அதுவும் இலவசமாய் என்ற நமீதா உங்களுக்கு ப்ரீயா வாசிங்மெசின் கொடுக்க போறென் என்று நமீதாவின் நாவில் நற்றமிழ் நழுவியது

இறுதியாக காரைக்குடியில தாமரை மலரும், தமிழ் நாடு வளரும் என்று சொல்லி கோஷம் எழுப்பி தனது தமிழுரையை முடித்துக் கொண்டார் நமீதா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments