அசாம் - மேற்கு வங்க மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

0 574

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் 69 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 171 பேரும், அசாமில் 39 தொகுதிகளில் 345 பேரும் போட்டியிடுகின்றனர். அசாமில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அம்மாநிலத்தில் இன்றைய தேர்தலுக்காக 800 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments