மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் சிறு- குறு தொழில்களுக்கு பாதிப்பு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

0 1110
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் சிறு- குறு தொழில்களுக்கு பாதிப்பு: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் பெருந்தொழில் நிறுவனங்களும், சிறு - குறு தொழில் நிறுவனங்களும் முடங்கி விட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று போடி, பழனி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டபின், மாலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பிரதமர் மோடி பேசியதை சுட்டிக் காட்டிய ஸ்டாலின், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

 

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் பெருந்தொழில் நிறுவனங்களும், சிறு - குறு தொழில் நிறுவனங்களும் முடங்கி விட்டதாகக் கூறிய ஸ்டாலின், பா.ஜ.க. அரசு நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

 

உடுமலைப்பேட்டையில் தக்காளிச் சாறு தொழிற்சாலை அமைக்கப்படும், வால்பாறையில் பெய்யும் மழைநீரைச் சேமிக்க எடமலை நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும், வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும்,அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலை புனரமைக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

மாவட்டம் முழுவதும் நீர்வழிப் பாதைகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments