உட்ராதீங்க அப்போ லெக் தாதா டான்ஸ்..! ஊர்காட்டு அடின்னா இப்படித்தான்..!

0 5767
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமமுக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற உற்சாக தொண்டர் ஒருவர், கொட்டுச்சத்தம் கேட்டவுடன் ஒற்றைக்காலில் நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமமுக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற உற்சாக தொண்டர் ஒருவர், கொட்டுச்சத்தம் கேட்டவுடன் ஒற்றைக்காலில் நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்.

தேர்தல் பிரச்சாரம் என்றால் போதும் அங்கு கூடியிருபோரை கவர்வதற்காக தான் உடுத்தியிருக்கும் லுங்கி அவிழ ஆட்டம் போடுவது இவர்களின் வழக்கம்..!

கொட்டுசத்தம் காதில் ரீங்காரமிட, பெண் தொண்டர்களின் சிரிப்பலையால் சாவு குத்து குத்திய இந்த போதை தொண்டரால் பிரச்சாரம் களைகட்டியது.

அவரது ஆட்டத்தை பார்த்து உற்சாகமான கட்சியினர் ஆளுக்கு ஒரு கட்சி துண்டை போட தூக்குத்துரை மீசையுடன் அந்த போதை தொண்டர் தூக்கிய கால்களுடன் போட்ட குத்தாடத்தால் பிரச்சாரக்களம் குலுங்கியது.

அப்போது பிரச்சாரக்களத்துக்கு டிடிவி தினகரன் வந்துவிட, நடன சூறாவளையை அம்போவென விட்டு விட்டு, கூட்டமெல்லாம் அங்கிருந்து நகர்ந்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments