பா.ம.க தலைவர் பதவி பவர் இல்லா டம்மி போஸ்ட்..! திருமாவளவன் விமர்சனம்

0 11030
பாட்டாளி மக்கள் கட்சியும் ,பாரதீய ஜனதாவும் இரட்டை குழந்தைகள் என்றும் அந்த கட்சிகளின் தலைவர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மி போஸ்ட் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியும் ,பாரதீய ஜனதாவும் இரட்டை குழந்தைகள் என்றும் அந்த கட்சிகளின் தலைவர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மி போஸ்ட் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மி போஸ்ட் என்று விமர்சித்தார்.

அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் அதிகாரத்தை அள்ளிக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பா.ம.கவும் , பா.ஜ.கவும் இரட்டைகுழந்தைகள் என்று விமர்சித்த திருமாவளவன், பா.ஜ.கவில் தலைவர் பொறுப்பு வகித்த கடலூரை சேர்ந்த கிருபானிதி மீது ஊழல் முறைகேடு புகார் சுமத்தபட்டதாக தவறாக குறிப்பிட்டு விட்டு, பின்னர் அதனை பங்காரு லட்சுமணன் என திருத்திக் கொண்டார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments