மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

0 1863
தமிழ்நாட்டில், மத்திய, மேற்கு மண்டலங்களின் ஐ.ஜி.க்கள், கோயம்புத்தூர் எஸ்.பி ஆகியோரை பணியிட மாற்றம் செய்திருக்கும் தேர்தல் ஆணையம், திருச்சிக்கு புதிய காவல் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மத்திய, மேற்கு மண்டலங்களின் ஐ.ஜி.க்கள், கோயம்புத்தூர் எஸ்.பி ஆகியோரை பணியிட மாற்றம் செய்திருக்கும் தேர்தல் ஆணையம், திருச்சிக்கு புதிய காவல் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமுக்கு பதிலாக தீபக் எம் தாமோரும், மேற்கு மண்டல ஐ.ஜி தினகரனுக்கு பதிலாக அமல்ராஜூம், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு மாற்றப்பட்டு, செல்வ நாகரத்தினமும் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், தங்களின் அனுமதி இன்றி, அவர்களுக்கு பணி இடங்களை ஒதுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments