நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்

0 1724
நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை முதல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை முதல் தொடங்குகிறது. 

ஜனவரி மாதம் 16-ந்தேதி முதன் முதலில் நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார ஊழியர்களுக்கும், அடுத்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மார்ச் 1-ந்தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதுவரை 7 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 1- ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments