திருச்சியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

0 1064

திருச்சியில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி பெரிய கடை வீதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் குகனிடம்  ஒப்படைத்த நிலையில், அந்த தங்க நகைகள் சீல் வைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments