மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநில இளைஞர் படுகாயம் : முதலுதவி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

0 3646
மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வடமாநில இளைஞர் பாடுகாயம் : முதலுதவி அளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த வடமாநில இளைஞருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவரை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்வதற்காக  தமிழிசை சவுந்தரராஜன் சாலை மார்க்கமாக காரில் சென்று கொண்டிருந்தார். 

திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாலம் அருகே வந்துகொண்டிருந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி தலையில் ரத்த காயங்களுடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இதனை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து, தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments