எங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்!

0 771098

ராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பின் போது பாஜக வேட்பாளர் உடன் வராததால், டென்சன் ஆன நடிகை நமீதா பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்ட நிலையில், தங்களை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் என்று அவரது கணவர் கையெடுத்து கும்பிட்டபடி கேட்டுக்கொண்டார். 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகை நமீதா 4 இடங்களில் இன்று பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதல் இடமான மருதுபாண்டியர் சிலை அருகே காலை 9 மணிக்கு வேட்பாளர் வராதால் அங்கு பிரச்சாரத்தை ரத்து செய்த நமீதா, 2வது இடமான தேவர் சிலை மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே பரப்புரை செய்தார். அங்கும், வேட்பாளர் வராத போதிலும், தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி செய்த உதவிகளை பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இறுதியாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற இருந்த பிரச்சாரத்திலும் பாஜக வேட்பாளர் குப்புராம் வராததால், டென்சன் ஆன நடிகை நமீதா பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார். அங்கு சென்ற பாஜகவினர் மீண்டும் ராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அப்போது நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி “வேட்பாளர் இல்லாமல் இனிமேல் தங்களை வாக்கு சேகரிக்க அழைக்காதீர்கள் என்றும், தாங்கள் சென்னை செல்வதாகவும் கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments