தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது நான்கரை சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். 600க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 29.5 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில்,
10 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் 2ம் தேதி வர உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments