தேனி : தினமும் கேலி கிண்டல்.... சிறுவனை கொலை செய்த சக மாணவன்!

0 14166
ஆம்புலன்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

தேனி அருகே தினமும் தன்னை கேலி செய்த சிறுவனை கொலை செய்த சக மாணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

தேனி மாவட்டம், கண்டமனூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தனசேகரன் (வயது17). கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனசேகரன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.தனசேகரன் தன்னுடன் படிக்கும் மாணவனான கண்டமனூரை சேர்ந்த சிறுவனை அடிக்கடி கேலி செய்துள்ளார். இதனால் தனசேகரனுக்கும், கேலி செய்யப்பட்ட மாணவனுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தனசேகரன் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் அந்த சிறுவனை கேலி செய்துள்ளான்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது கேலிக்குள்ளான மாணவன் தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் தனசேகரனின் தலையில் பலமாக தாக்கினான். தலையில் பலத்த காயமடைந்த தனசேகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். தொடர்ந்து, ஆசிரியர்கள் தனசேகரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று பலனளிக்காமல் தனசேகரன் பரிதாபமாக இறந்து போனான்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மாணவனை செய்தனர்.இறந்த தனசேகரனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு கண்டமனூருக்கு செல்லப்பட்ட போது, இறந்து போன மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டமனூர்- தேனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த தனசேகரனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments