மேற்கு வங்கம், அசாமில் நாளை 2ஆம் கட்டத்தேர்தல்

0 1375
மேற்கு வங்கம், அசாமில் நாளை 2ஆம் கட்டத்தேர்தல்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 2-ஆம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தேர்தல் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது. 2-ஆம் கட்டத் தேர்தலையும் அவ்வாறே நடத்துவதற்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments